Monday, June 25, 2012

கனவு பலன்கள்


இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.

சுப சொப்பனங்கள் பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல்? ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும். வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு

பகலில் காணும் கனவுக்கு பலனில்லை
 இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும். 

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். 

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். 

வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை தூக்கம் எதற்காக?

தூங்குகின்ற போதுதான் நமது உடல் உறுப்புக்கள் எல்லாம் ஓய்வெடுத்துக் கொள்கின்றன. தூக்கம்தான் உயிரினங்களுக்கு உண்மையான ஓய்வு.

தூங்கும்போது இதயத்துடிப்பு குறைவாகவும் இரத்தம் சீராக செயல்படுகின்றதென்றும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிலர் சொல்வார்கள் ஒரு கோழித் தூக்கமாவது தூங்கவேண்டுமென்று. கோழி நின்றுகொண்டே தூங்குமென்பது எல்லோருக்கும் தெரியும்.

யுத்தகாலங்களில் போர் வீரர்கள் சிறிதுநேர ஓய்வு கிடைத்தாலும் நின்றபடியே தூங்குவார்களாம்! அதுதான் கோழித்தூக்கம்! ஆனால் எங்களில் சிலர் இரவில் கும்பகர்ணத் தூக்கம் தூங்கிவிட்டுக் காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எழும்புவார்கள் பின்பு மத்தியான‌ம் சாப்பாட்டிற்குப் பின்னரும் பிற்பகிலில் ஒரு மணிநேரமாவது தூங்குவார்கள். அவர்களின் கணக்குப்படி அதை கோழித்தூக்கம் என்று கூறிக்கொள்வார்கள்.

மனிதன் ஒவ்வொரு இரவும் இறந்து மீண்டும் மறுநாள் பிறக்கின்றான்” என்று.

ஆனால் சிலர் இருக்கின்றார்கள் எவ்வளவுதான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் சின்னச் சத்தம் கேட்டாலும் விழித்துவிடுவார்கள்.

மிருகங்களில் நாய்களும் அப்படித்தான்! நாய் எப்பொழுதும் தூங்கும்போது காதுப்பகுதியை தரையில் வைத்தே படுத்துக்கொள்ளும். அதன் செவிப்புலன்கள் தூரத்தில் ஏற்படும் சிறு அதிர்வையும் உணர்த்தி விழிக்க வைக்கின்றது.

சிலருக்கு தூங்குவதற்கு அமைதியான சூழ்நிலை வேண்டும். வேறு சிலர் இருக்கின்றார்கள் எந்தமாதிரியான இடத்திலும் தூங்கிவிடுவார்கள். மண்டலேஸ்வரன் என்ற எனது நண்பர் ஒருவர் இசைக்குழு நடாத்தி வந்தவர். திருவிழாக்கள், கொண்டாட்டங்களுக்கு நிகழ்ச்சி நடாத்துவதற்கு செல்லும்போது அங்கு அப்பொழுது வேறு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தால் அந்த சிறு இடைவெளியில் அங்கு ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் லைற் என்ஜினுக்குப் பக்கத்திலேயே ஒரு துணியை விரித்து தூங்கிவிடுவாராம்!

இதுவே அவருக்கு பழக்கமாகி பின் நாட்களில் அப்படியான சத்தம் இல்லாவிட்டால் தனக்கு தூக்கம் வருவதில்லை என்று சொன்னார். இப்படி விசித்திரமான பழக்கங்களை உடையவர்களும் இருக்கின்றார்கள்

குழந்தைகள் தூங்கும் நேரத்தில்த்தான் வளர்ச்சியடைகின்றதாம்! ஆம் குழந்தைகளின் தொழிலே தூக்கம்தான்.

தூக்கத்தில் கனவுகள் வருவது வழமை. கனவு என்பது என்ன?

எங்களின் நினைவுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருவதாக உளவியல் ஆராட்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

இள வயதினர்க்கு காதல் கனவுகளே அதிகமாக வருமாம். சினிமா பார்த்துவிட்டு வந்து தூங்கினால் கனவில் அந்தப் படத்தின் கதாநாயகனோ, அல்லது கதாநாயகியோ கனவில் தோன்றுவார்களாம். அவரவர்களின் நினைவுகளே கனவுகள்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்தனது நறுக்குகள் ஒன்றில் சொல்லுகின்றார் ‘உன் கனவில் பாம்பு துரத்துகின்றது நீ ஓடுகின்றாய்! குறவன் கனவில் அவன் துரத்துகின்றான் பாம்பு ஓடுகின்றது” என்று

ஆம் கனவுகள் எல்லாம் அவரவர் நினைவுகளைப் பொறுத்ததே.

கனவுகளுக்கு பலன் சொல்பவர்களும் உண்டு.

கனவில் மலத்தைக் கண்டால் பணவரவாம்! மாங்கல்யத்தைக் கண்டால் துன்பம் சூழுமாம்!

இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். பல்லி விழுந்தாலும் பலன் சொல்வார்கள்! பல்லு விழுந்தாலும் பலன் சொல்வார்கள்


உடலின் மேல் பாம்பு ஊர்ந்து செல்வது நல்லது. சங்க காலத்தில் வாழ்ந்த வேடுவர்கள் இதனை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர். இன்றைக்கும் கோத்தகிரி, ஊட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் படுக இன மக்கள் பாம்பை உடலின் மீது ஊர்ந்து செல்ல வைத்து தோஷ சாந்தி செய்கின்றனர். 

எனவே, பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால், அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாகக் கருதலாம்


 மனதின் வெளிப்பாடே கனவுகள். எந்த கனவுகளும் விருப்பத்திற்கு உட்பட்டு வருபவை அல்ல. அவை தன்னிச்சையாக நிகழும் மனதின் உள்ளுணர்வு வெளிப்பாடுகள். அவற்றுக்கும் பலன்கள் உண்டு. ஆனால் அவை யாராலும் அறியப்படாதவை.

நல்ல கனவுகளைக் கண்டால் என்றுமே உறக்கம் வராது. அதுபோல தீய கனவுகளைக் கண்டால் கடவுளை வணங்கிவிட்டு உறங்குவது நல்லது.

இதோ சில கனவுகளுக்கான பலன்கள்:

* குழந்தையைக் கனவில் காண்பது நல்லது. தொழில் விருத்தி ஏற்படும். பொருள் வரவு அதிகமாகும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.

* சூரியனைக் கண்டால் வியாதிகள் நீங்கும். விரோதிகளை வெல்லும் ஆற்றல் கிட்டும்.

* கோயிலைக் கண்டால் நூதனமான தொழில் விருத்தியாகும். செல்வம் குவியப்போவதைக் குறிக்கும்.

* வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவு கண்டால் வறுமை நீங்கும்.

* பலருடன் சேர்ந்து சாப்பிடுவதாக கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும்.

* பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும் குருவிகளைக் கனவில் காண்பது நன்மையானது. கஷ்டமான நிலை விலகும். வம்புவழக்கு இருப்பின் வெற்றி கிட்டும்; நோயுற்றிருப்பின் நோய் அகலும். குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.

குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.

குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும். குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.

குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும். அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.

அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்¢டமும் உண்டாகும். எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும். அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம்.

வெண்பட்டு ஆடை உடுத்தியிருப்பதாகக் காண நேரின் பெண்களின் சேர்க்கையும் அதனால், இலாபமும் நேரும் தன்னை யாரோ ஏமாற்றிவிட்டதாகக் கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம்.

* ஒரு நூதமான இயந்திரத்தைக் கண்டால், தான் மேற்கொள்ளப் போகும் செயலால் வெற்றியும் இலாபமும் ஏற்படும்.

* அந்த இயந்திரத்தைத் தானே இயக்குவதாய்க் காண நேரின், செய்யப்போகும் தொழிலில் நிச்சயம் அபிவிருத்தியும் இலாபமும் மிகும். அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டால் தான் நினைக்கும் காரியத்தைச் செய்வதால் நன்மை பெறலாம்.

* ஆனால இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்து நின்று போவதாகக் கண்டால், செய்யும் தொழில்கூட பாழ்படப் போகிறது என்பதை அறியலாம்.

* ஆண் பெண் கலந்த கூட்டத்தைக் கண்டால் செய்தொழிலில் விருத்தி உண்டாகும¢.

* நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர். எலுமிச்ச மரத்தைக் காண்பது நல்லது. அதில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

* அதுவே பழமாக இல்லாது காயாக இருப்பின் பண வரவு ஏற்படும். ஆனால் மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.

* எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். தெளிந்த நீரைக்காணின் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கப் போவதையும், நல்ல காலம் தொடங்குகிறது என்பதையும் அறியலாம் பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.

* அரண்மனையைக் கண்டால் பொருள் விருத்தியாகும்.

* அரண்மனைக்குள் தாமே செவதாய்க் கான நேரின், உற்றார் உறவினர்களால் சந்தோஷம் மிகுதியாகும். செல்வ நிலையும் உயரும்.

* வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

* எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.

*அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.

* காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும்.

* தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.

* சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கை மிகும்.

* சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார்.

* ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர் உண்மை: நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், முளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன. இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான். அவற்றில் உண்மை கிடையாது. `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதுபோலத்தான், கனவுகள் தொடர்பான பலன்களும்! நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீயபலனுக்கும்!

 பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம். பாலூட்டி இன மிருகமே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன. அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம். கனவு பற்றிய மேலும் சில உண்மைத் தகவல்கள்: பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம்பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி கைக் குழந்தைகளும் கனவு காண்கின்றன. ஏன்… தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது. மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன அடைய நினைக்கும் உயர்நிலையை நம் எண்ணங்களை வாக்கியங்களாய் அமைத்து நம் பார்வையில் படும்படி வைப்பது நல்ல பலனைத் தரும். ஏனெனில் எது கண்களில் படுகின்றதோ அது மனதில் ஆழமாகப் பதிகின்றது. மனம், தொடர்ந்து எதை நினைக்கின்றதோ அதுவாகவே நாம் ஆகிறோம். வெற்றியின் முதல் கட்டம் நம்மை நாமே வெற்றியாளராக பார்ப்பதுதான். இதுமட்டும் வெற்றிக்கான காரணி ஆகிவிடாது. கனவில் கண்டு மகிழ்ந்த காட்சியும் கண்முன்னே தெரியும் வாசகங்களும் நிஜம் பெற சரியான திட்டம் தேவை.

எதிர்காலத்தை அறியும் சக்தி படைத்தவர்களின் கைரேகை பற்றிக் கூறுங்கள்?

 
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
 
சில குறிப்பிட்ட கைரேகை அமைப்பைப் பெற்றவர்கள் எதிர்காலத்தை கணிக்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என சில கைரேகை தொடர்பான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றி விளக்குங்கள்?

பதில்: எதிர்காலத்தை அறியக் கூடியவர்களின் கையில் சாலமன் ரேகை (அல்லது) சக்தி ரேகை இருக்கும் என கைரேகை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆள் காட்டி விரல் குரு பகவானுக்கு உரியது. அந்த விரலுக்கு கீழ் உள்ள மேடு “குரு மேட” என்று அழைக்கப்படுகிறது.

குரு மேட்டில் நேர் ரேகைகள் (ஒன்றுக்கு மேற்பட்ட) இருந்தாலோ, முக்கோணக் குறியீடு இருந்தாலோ, நட்சத்திரக் குறியீடு இருந்தாலோ அவர்கள் முக்காலத்தையும் உணரக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என கைரேகை சாஸ்திரம் கூறுகிறது.

இதேபோல் உள் செவ்வாய் மேடு மற்றும் சந்திர மேடு ஆகியவை முடிவடையும் இடத்தில் நட்சத்திரக் குறியீடு அல்லது நாற்கரக் குறியீடு இருந்தாலும் அவர்களுக்கு எதிர்காலத்தை அறியும் சக்தி இருக்கும்.

முக வடிவம் குணத்தின் அடையாளமா?

 
சார்லஸபுரூனவரைந்ஓவியங்களிலஒன்றாகழுகமுவடிவமகொண்மனிதனநாமசந்திக்கின்றோமஎன்றவைத்துக்கொள்ளுங்கள், கழுகினுடைஅலகைபபோநீண்மூக்கையும், அதனகண்களைபபோகூரிவிழிகளையுமகொண்டவராஇருந்தால், அவருமகழுகதனதஇரையிலகுறியாஇருப்பதபோஇந்தமனிதருமதனதசுநோக்கத்திலேயகருத்தாஇருப்பாரஎன்றமுடிவசெய்திமுடியுமா? அப்படி முடிவிற்கவந்தாலஅதசரியான, பகுத்தறிவகொண்முடிவாஇருக்காது.



ஏனெனிலஒவ்வொரமனிதருமமுதன்மைககுணங்களைககொண்டவர்களாகவும், வாழ்க்கையிலதாங்களபெற்அனுபவத்தாலபண்பட்டவர்களாகவுமஇருப்பார்கள். தனதவாழ்வினஒவ்வொரபகுதியிலுமஅவனவேறுபட்டவனாகவஇருந்திருப்பான். பிறப்பிலிருந்தஇறப்பவரஅவனதஅடிப்படகுணங்களிலமாற்றமஇல்லாமலயாருமவாழ்ந்தமடிவதில்லை. எனவமுகத்திலதெரியுமவிலங்கஅல்லதபறவையினவடிவத்தைககொண்டஅவைகளினகுணத்தஅவனகொண்டிருப்பானஎன்றமுடிவிற்கவந்திமுடியாது.

நமதநாட்டிலுமஒரமுறபண்டைகாலமதொட்டஇருந்தவருகிறது. அம்முறையினபெயரசாமுத்திரிகலட்சணம். நமதநாட்டிலுள்ஜோதிடர்களஇம்முறையிலதேர்ந்தவர்களாஉள்ளனர். இவர்களஒருவரினமுவடிவதவைத்தஅவருடைகுணங்களகூறுவதமட்டுமின்றி, அவர்களுடைஜாதகத்தையகணித்துவிடுகின்றனர்.

இததொடர்பாஜோதிரத்னமுனைவர் க.ப. வித்யாதரனசந்தித்துபபேசினோம். பிசியோக்னாமியும், சாமுத்திரிகலட்சணமுமஇருபேரகொண்ஒரசாஸ்திரம்தானஎன்றகூறினார். தனதஅனுபவத்திலதானசந்தித்மனிதர்களினமுகங்களிலஎந்விலங்கஅல்லதபறவையினசாயலஇருந்ததஅவர்களினகுணங்களுமஅந்விலங்கஅல்லதபறவையினகுணத்தபிரதிபலித்ததாகககூறினார்.

உதாரணத்திற்கு, குதிரையைபபோன்நீண்முவடிவத்தைககொண்மனிதர்கள், குதிரையைபபோன்றகளைப்பின்றி எப்போதுமஓடி உழைப்பவர்களாகவும், மற்றவர்களமிகவுமகடினமாஉழைத்தசாதித்தவைகளஅவர்களமிகசசாதாரணமாசாதித்தததனதஅனுபவத்திலகண்டதாவித்யாதரனகூறினார்.

சாமுத்திரிகலட்சணமநமதநாட்டினசாஸ்திரம், பிசியோக்னாமி மேற்கத்திமுறை, ஆனாலஇவைகளினஅடிப்படஒன்றுதான். ஆனாலஇந்முறைகளஅறிவியலபூர்வமானதுதானா? இவைகளினமுடிவுகளசந்தேகத்திற்கஇடமற்ற, தெளிந்முடிவுகளவல்லதா? இதனதகுந்தரவுகளுடனஉலகமமுடிவசெய்வேண்டும்.

இதுகுறித்தநீங்களஎன்கூறுகிறீர்கள்? இவற்றையெல்லாமநம்புகிறீர்களா? இல்லையா? எதுவாயினுமஎங்களுக்கஎழுதுங்கள்.

`சாமுத்திரிகா லட்சண’ இலக்கணப்படி, உங்கள் மூக்கு

`சாமுத்திரிகா லட்சண’ இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக் கூடி யவை என்று நம்பப் படுவதுண்டு. அந்த வகை யில் ஒருவரின் `மூக்கை’ வைத்தே அவரின் குண நலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறி விடலாம் என்கிறார், முக வியல் நிபுணர் டாக்டர் பிரேம் குப்தா. இவர் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங் களும்…
பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.
பன்றி’ மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள் பொருட் செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ் க்கை வாழ் வதிலும் ஆர்வமாக இருப்பார்கள். சுயநலமிக்க இவர்கள் சில நேர ங்களில் மற்றவர் களால் எளிதாக ஏமாற்றப்படு வார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளா வும் இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய் வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சிய ளிக்கும் மூக்கு இது.
கிளி’ மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால் வாழ்க்கையில் உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் சந்தர்ப்பவாதிகள், விரைவாகச் சிந்திப் பவர்கள். மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் இவர்கள் சில வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச்
சீராக நீளும் கச்சிதமான மூக்கு இது.
நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத் தனத்தை இவர்கள் விரும்பமா ட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர். இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும்.
இந்த மூக்கு, உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும். பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும்.

உம்மணாம் மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சில நேரங்களில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள்.
மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.
இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி செய்யப் பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்’ எடுப்பது இவர்களுக்குப் பிடிக்காது. சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டா ர்கள். அடுத்தவர்களின் கோணங்களையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
இந்த மூக்கு பெரியதாகவும், சதைப்பற்றா னதாகவும், அடிப்பகுதி யில் அகன்றும் இருக்கும்.
இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தர வுகளை ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச் சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு இது.
இவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக் கைக்கு உரியவர்கள். சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம், ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில் சிக்கிக் கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமா றுவார்கள்.
வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு இது.
இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை இணக்க மா க்குவதில் தேர்ந்தவர். ஆனால் மற்ற வர்களின் கருத்துகளை மதிக்க மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.
நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு இது. மூக்கு நுனி வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந் திருக்காது. இந்தியா வின் மொகலாய அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது
இந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சை யாக முடிவெடுக்கும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும் இவர்கள், பொறுமை சாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள். நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர் கள் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தொந்தரவு கொடுப் பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள்.
நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு இது. நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக் குறைய அம்பு நுனியைப் போலி ருக்கும்.
இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற சிந்தனைப் போக்கு உடைய வர்கள். இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால் தங்களின் சநதேக மனப்பான்மையால், சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு வருபவர்கள்.படபடப்பாக இருக்கும் இவர் கள், தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள்.
நன்றி-தினத்தந்தி

சாமுத்திரிகா லட்சணம் பெண்ணுக்கு மட்டுமில்லை..., ஆணுக்கும் உண்டு.



தலை:
ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம். பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.

நெற்றி:
அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வம்.  மிகச் சிறுத்திருப்பின் மூடன். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடம்.

கண்: 
ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.

மூக்கு: 
உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

வாய்:
அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..

  உதடு:
உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.

கழுத்து:
ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமை.

தோள்:
தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

நாக்கு: 
நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரம்.

பல்:
மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரம்..

காது:
காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.

கைகள்: நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

மணிக்கட்டு:
மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரம்.

விரல்கள்:
கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுள். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.

மார்பு: ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுள். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதிகம் இருக்கும்..

வயிறு: 
பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.

முதுகு: 
சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரம்.

 கால்கள்:
கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

கால்பாதம்: கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்..

டிஸ்கி: இந்த சாமுத்திரிகா லட்சணத்தை உங்களோடு ஒப்பிட்டு பாருங்க சரியா வந்தா பகிர்வுக்கு நன்றின்னு கமெண்ட் போடுங்க. ஒத்து போகலைன்னா கல், கத்தி, அருவாளெல்லாம்  தூக்காதீங்க. 
ஏன்னா, நான் இதை  ஒரு சைட்ல இருந்து சுட்டுட்டன்.

பெண்களிற்கான சாமுத்திரிகா லட்சணம்........!

ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ... கொள்ளைதான்.
ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.
சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்?
1. கால், பாதம்: ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும்.
பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள்.
மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்டசாலியாகவும்) இருப்பார்கள்.
சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
2. தொடை: பெண்களின் தொடை வாழைத்தண்டுபோல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.
3. இடை: இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.
4. மார்பகங்கள்: பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.
5. கைவிரல்: பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய்போல் அழகாக காட்சி தர வேண்டும்.
6. கழுத்து: பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.
7. கண்கள்: பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.
உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.
மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு.
உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.
விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள்.
மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.
விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.
வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.
முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.
உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.
8. கூந்தல்: பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.
கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.
அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப்படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.
ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.
கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்குகடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.
9. வாசம்: பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.
10. மூக்கு: மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு.
எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.
ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.
சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.
மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.
ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.
வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.
11. நெற்றி: சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.
நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.
செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

மச்சங்கள் என்ன சொல்கின்றன ????-மச்ச சாஸ்திரம்

சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத்திருக்கின்றனர். ஆய கலைகள் 64-ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.