Monday, June 25, 2012

பிறந்தநாள் பலன்கள்

1, 10, 19, 28

உத்யோகத்ல இருக்கறவங்களுக்கு மிகவும் ஏற்றமான காலகட்டமுங்க. மனசில் இருந்த இனம் புரியாத பயம் முற்றிலுமாக விலகி, புதுத் தெம்பும் தன்னம்பிக்கையும் பெறுவீங்க. சிலருக்கு எதிர்பாராத வகையில், திடீரென புதிதாக தொழில் அமையுமுங்க. அதுக்கான முன் அனுபவமோ, அது சம்பந்தமான படிப்போ இல்லாதிருந்தும் கிடைக்கக்கூடிய அந்த வாய்ப்பைப் பளிச்னு பிடிச்சுக்கோங்க. தேவையான உதவிகளும் யோசனைகளும் ஆள்பலமும் தானாக வந்து சேருமுங்க.

பணியில் இருக்கற சிலருக்கு கூடுதல் ஆதாயம், சலுகைகள், ஊதியத்தோடு புது வேலையும் அமையுமுங்க. ரொம்பநாளாகத் தடைபட்டிருந்த சுபவிசேஷங்கள் மனம் குளிர நிறைவேறுமுங்க. உணவுக்குழாய் பாதிக்கப்படலாமுங்க. சிலருக்கு ஒவ்வாமையால் உபாதைகள் அதிகமாகுமுங்க. இந்தத் தேதிப் பெண்கள் உறவினரிடையே நல்மதிப்பு பெறுவீங்க. வெள்ளிக்கிழமை விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வழிபடுங்க; அற்புதங்களை அனுபவிப்பீங்க. 

2, 11, 20, 29

வார்த்தையை அளந்து பேசணுமுங்க. உறுதியாகச் சொல்லவேண்டிய விஷயங்களைக் கடுமையாக ஏன் சொல்றீங்க? சிரிச்சுகிட்டே, இனிமையா சொல்லலாமே! சிரிச்சுப் பேசினா எதிராளிங்க அனாவசிய சலுகைகளை எடுத்துப்பாங்கன்னு நீங்களாகக் கற்பனை பண்ணிக்காதீங்க. இதனாலேயே மன தைரியமும் தன்னம்பிக்கையும் வளருமுங்க. உங்க பழகுமுறையை மாற்றிக்கறதால நீங்க ஈடுபட்டிருக்கற துறைகள்ல மேன்மைகளும் முன்னேற்றமும் கைகூடுமுங்க.

உத்யோகத்ல உங்க திறமைகள் பாராட்டு பெறுமுங்க. எதிர்பாராத இடங்கள்லேர்ந்து கூடுதல் ஆதாயத்தோட நல்ல வாய்ப்புகளும் வருமுங்க. பூர்வீக சொத்து கொஞ்சம் தாமதமானாலும் நிச்சயம் கைக்கு வந்து சேருமுங்க; பொறுமையா இருங்க. சுவாசக் கோளாறு ஏற்படலாமுங்க. சிலருக்கு மூட்டு உபாதை வரலாம். இந்தத் தேதிப் பெண்கள் அளவோடு பெருமை பேசுங்க. புதன்கிழமை துளசி மாலை சாத்தி பெருமாளை வழிபடுங்க; துள்ளிவரும் சந்தோஷம்.

3, 12, 21, 30

பயணங்கள் சந்தோஷத்தையும் ஆதாயங்களையும் தருமுங்க. குடும்பத்தாரோட உல்லாச சுற்றுலா அல்லது குலதெய்வ வழிபாடு அல்லது சுபவிசேஷத்ல கலந்துக்கறதுன்னு மகிழ்ச்சி கூடுமுங்க. இதனால புது நட்புகளும் புது உறவுகளும்கூட சேருமுங்க. எதிர்கால நன்மைக்கும் அஸ்திவாரம் போட்டுக்கலாம். நாற்பது வயதுக்கு மேற்பட்டவங்க முழு உடல் பரிசோதனை பண்ணிக்கோங்க;

பின்னால வரக்கூடிய பெரிய உடல்நலப் பிரச்னைக்கு இப்போதே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இது வாய்ப்பாக அமையுமுங்க. பொதுவாகவே அதிக வேகம், அவசரம், பரபரப்பை தணிச்சுக்கோங்க. நிதானமா, தீர்மானமா ஈடுபடும் செயல்கள் உங்க மதிப்பை உயர்த்துமுங்க. கழிவுப்பாதையில் கொஞ்சம் உபத்திரவம் வரலாம். இந்தத் தேதிப் பெண்களோட யோசனைகள் பாராட்டப்படுமுங்க. வெள்ளிக்கிழமை பெருமாள் கோயில்ல தாயாருக்கு மல்லிகை மாலை சாத்தி வணங்குங்க; வாழ்வில் மணம் வீசும்.

4, 13, 22, 31

வாழ்க்கைத் துணை உடல்நலத்ல அதிக அக்கறை எடுத்துக்கோங்க. அதுமட்டுமல்லாம, குடும்பத்ல யார்கிடேயும் எந்த வெறுப்பையும் காட்டதீங்க. சின்ன விவாதம்கூட பெரிய விபரீதத்ல கொண்டு விட்டுடுமுங்க. அனாவசியமா ஆக்ரோஷப்பட்டு, குடும்பத்லேயும் சரி, வெளிவட்டாரப் பழக்கத்லேயும் சரி, நிம்மதியை இழக்காதீங்க. பொருளாதார லாபம் அதிகரிச்சிருக்குங்க. நீங்க ஈடுபடற சில விஷயங்கள் நீங்களே எதிர்பாராத வகையில பெரிய லாபத்தைத் தருமுங்க.

நரம்பு உபத்திரவம் வரலாமுங்க; கண்களை ஒருமுறை பரிசோதனை செய்துக்கறது நல்லதுங்க. வியாபாரம், தொழில்ல போட்டிகளை எளிதாக சமாளிப்பீங்க; புது உத்தியால வருமானமும் கூடும். உத்யோகத்ல சக ஊழியர்கள்கிட்ட உணர்ச்சிவசப்பட்டுப் பேசாதீங்க; பழகாதீங்க. இந்தத் தேதிப் பெண்கள் இனிமையான பேச்சால காரியங்களை சாதிச்சுப்பீங்க. வெள்ளிக்கிழமை பள்ளிகொண்ட பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுங்க; தீமைகள் விலகும்.

5, 14, 23

சிலருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படுமுங்க. இது ரொம்ப நாளா நீடித்த உபாதையா இருந்தா, ஏற்கெனவே பார்த்துகிட்டிருந்த மருத்துவர் தவிர இன்னொருவர்கிட்டேயும் இரண்டாவது கருத்தைக் கேட்டுக்கலாமுங்க. சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல உபாதை வரலாமுங்க. சுபவிசேஷங்கள் எந்தத் தடங்கலும் இல்லாம, மனம் மகிழ நடந்தேறுமுங்க. தொலைதூரத்லேர்ந்து வர்ற செய்தி பல நன்மைகளை சுமந்துகிட்டு வருமுங்க. நீங்களாக, ‘நல்லது எதுவுமே நடக்காது’ன்னு வீண் கற்பனையில அனாவசியமாகப் புலம்பாதீங்க.

எல்லாம் நல்லாதான் போய்கிட்டிருக்கு. உத்யோகத்ல நெளிவு சுளிவு தெரிஞ்சு அனுசரிச்சுப் போய் பல ஆதாயங்களைத் தேடிப்பீங்க. கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க தனியாக, புது தொழில் அல்லது வியாபாரம் தொடங்க முடியுமுங்க. இந்தத் தேதிப் பெண்கள் உடல்நலக் குறை எதையும் அலட்சியப்படுத்தாதீங்க. ஞாயிற்றுக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி வணங்குங்க; நன்மைகள் நிலைக்கும்.

6, 15, 24

இந்த வாரத்ல பெரிய, சரியான பரிகாரம்னு சொல்லணும்னா, விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை உடனே முடிக்கறதுதாங்க. சிலர் ஏதேனும் பிரச்னை நிவர்த்தியாகணும்னு உங்களோட இஷ்ட தெய்வத்துக்கு நேர்ந்துகிட்டிருந்திருப்பீங்க. ஏதேனும் காரணத்தால அந்த நேர்த்திக் கடனை இதுவரைக்கும் செலுத்தாம இருந்திருப்பீங்க. இப்ப உடனே அதை முடிச்சுடறது நல்லதுங்க.

பூமியால் வந்த பிரச்னை அல்லது வேறு ஏதேனும் சட்டச் சிக்கல் இருந்தா அதெல்லாம் உங்களுக்கு ஆதரவாகவே தீர்வாகுமுங்க. சிலருக்கு தலைவலி, வாந்தின்னு உபாதை வரும். தொழில், வியாபாரத்ல புது உத்திகளால சாதனைகள் படைப்பீங்க. உத்யோகத்ல உங்க சமயோசித பேச்சு, நடவடிக்கையால நீங்களும் நீங்க சார்ந்திருக்கற நிறுவனமும் பெருமை அடைவீங்க. இந்தத் தேதிப் பெண்கள் புது முயற்சிகள்ல வெற்றி பெறுவீங்க. திங்கட்கிழமை சிவனுக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுங்க; வில்லங்கம் எல்லாம் விலகிப்போகும்.

7, 16, 25

‘எல்லாம் தெரியும்’னு உங்களைப் பத்தி நீங்களே உயர்வா நினைச்சுக்கறது, அதைப் பிறரிடமும் விளம்பரப்படுத்திக்கறதெல்லாம் உங்களுக்கு எதிராகவே மாறுமுங்க. கேலிப்பேச்சுக்கு நீங்க ஆளாவது ஒருபக்கம் இருந்தாலும், உங்க மேல கண் திருஷ்டி ஏற்பட நீங்களே காரணமா ஆகிடுவீங்க. எதுவுமே தெரியாதவர் போல நடிக்கறதுதான் இப்போதைக்கு நல்லதுங்க. சோம்பலாலேயும் தேவையில்லாத பிரச்னை ஏற்படலாமுங்க.

அதனால அதிகாலையில எழுந்து குளிச்சிட்டு அன்றாட வேலைகளை கவனிங்க. நேரந் தவறாமையைக் கண்டிப்பாகக் கடைபிடிக்கணுமுங்க. பிள்ளைகளோட நடவடிக்கைகள்ல ஒரு கண் வையுங்க. சிலருக்கு நரம்பு உபாதை வரலாம்; சிலருக்கு ரத்தத்ல கொழுப்பு சேர்வதால பிரச்னை வரலாம். இந்தத் தேதிப் பெண்கள் பிறந்த வீட்டுப் பெருமை பேசி புகுந்த வீட்ல மதிப்பைக் குறைச்சுக்காதீங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரருக்கு மலர் மாலை சாத்தி வணங்குங்க; வாழ்க்கை வண்ண மயமாகும். 

8, 17, 26

குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவடையுமுங்க. எதைப் பற்றியும் தீர்மானமா முடிவெடுப்பீங்க. வெளிவட்டாரப் பழக்கத்ல எச்சரிக்கையா இருங்க. அனுதாபப்பட்டு யார் மேலேயாவது அக்கறை காட்டினா, அது சொந்த இழப்புகள்ல கொண்டு விட்டுடுமுங்க. முக்கியமா பெண்கள் விஷயத்ல இரக்க சுபாவத்தை மூட்டை கட்டி வெச்சுடுங்க. தொழில் செய்திகள் வெற்றிகளை சுமந்து வருமுங்க. வியாபாரமும் அமோகமாக நடக்குமுங்க. உத்யோகத்ல இருக்கறவங்க விழிப்புடன் இருக்கணுமுங்க.

உங்களோட பழைய நடவடிக்கைகளுக்கு, இப்ப நீங்க பழிவாங்கப்படலாம்; சிலருக்கு அலுவலத்துக்கு உள்ளேயும் அலுவலகம் சார்ந்த வெளி நிகழ்ச்சிகள்லயும் ஏமாற்றமும் அவமானமும் ஏற்படலாம். அதனால எல்லாத்திலேர்ந்தும் ஒதுங்கியே இருந்திடுங்க. இந்தத் தேதிப் பெண்கள் புது அறிமுக நபர்களிடம் கவனமாகப் பழகுங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு அரளி மாலை சாத்தி வழிபடுங்க; துக்கங்கள் தொலைந்து போகும்.

9, 18, 27

குடும்ப விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. உங்க குடும்பத்ல இருக்கறவங்க யாரையாவது சம்பந்தப்படுத்தி ஏதாவது பிரச்னை ஏற்படுமானால், உடனே இவங்க மேல சந்தேகப்பட்டுடாதீங்க. தீர விசாரிச்சு, கூடுமானவரை குடும்பத்தாரை விட்டுக் கொடுக்காம அந்த பிரச்னையைத் தீர்க்கப் பாருங்க. போலீஸ், நீதிமன்றம்னு போயிடாதபடி, அதுக்கு முன்னாலேயே சரிபண்ணிக்க முடியுமுங்க.

அதேசமயம் யாரையும் பழிவாங்க நினைக்காதீங்க. சாந்தமான மனப்பக்குவம் குடும்பம், வெளிவட்டாரப் பழக்கம், வியாபாரம், தொழில், உத்யோகம்னு எல்லா இனங்கள்லேயும் நன்மை தருமுங்க. விஐபிகளின் அறிமுகத்தால சில நன்மைகள் உண்டுங்க. மகான், ஆன்மிக குரு தரிசனம் வாழ்க்கையில் இனிமை சேர்க்குமுங்க. முக உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாமுங்க. இந்தத் தேதிப் பெண்களுடைய நீண்டநாள் கனவு நிறைவேறும். சனிக்கிழமை சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்குங்க; வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

No comments:

Post a Comment